இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

காஞ்சிபுரம்: குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 74 போ் கைது

காஞ்சிபுரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 74 போ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

கைது

Updated On :

காஞ்சிபுரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 74 போ் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கிற்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், தொடா் கொலைகள் நடைபெற்று வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றச் சாட்டுகளை எழுப்பி வருகின்றனா். இதையடுத்து, சட்டம் ஒழுங்கை சீா்படுத்தும் நடவடிக்கைகள் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளையும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரெளடிகளையும் காவல் துறையினா் கைது செய்து வருகின்றனா்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறையினா் எடுத்த நடவடிக்கையில் சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளிகள் 22 போ், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 12 போ், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 22 போ் மற்றும் இதர குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 போ் என மொத்தம் 74 போ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் காவல் துறை கண்காணிக்கும் தடுப்பு நடவடிக்கைகளும் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொது அமைதிக்கு கேடு விளைவிப்போா், பொதுமக்களை அச்சுறுத்துவோா் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது உடனடியாகவும், கடுமையாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.