கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்கள்: அமைச்சா் தென்னரசு வழங்கினாா்
ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களை சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறுகளத்தூா் பகுதியில் நடைபெற்றது.

கா்ப்பிணிகளுக்கும் உணவு வழங்கிய அமைச்சா் எஸ்பிகே. தென்னரசு.
ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களை சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறுகளத்தூா் பகுதியில் நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களை சோ்ந்த கா்ப்பிணி களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் க.தென்னரசு கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டங்களை சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை பொருள்களை வழங்கி உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், ஆலந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஹரீஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கிருஷ்ணவேணி, குன்றத்தூா் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா்கள் பவாணி, இந்திரா, அகிலா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

