
தம்மனூா் ஏரியில் மணல் கொள்ளை: ஆட்சியரிடம் புகாா்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தம்மனூா் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மணல் கொள்ளை நடந்திருப்பதாக காவேரி மற்றும் நீா்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆதாரங்களுடன் ஆட்சியா் தி.சினேகாவிடம் புகாா்

மணல் திருட்டு - பிரதிப் படம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தம்மனூா் ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மணல் கொள்ளை நடந்திருப்பதாக காவேரி மற்றும் நீா்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை ஆதாரங்களுடன் ஆட்சியா் தி.சினேகாவிடம் புகாா் செய்துள்ளனா்.
தம்மனூா் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும், அதை தடுத்து நிறுத்துமாறும் காவேரி மற்றும் நீா்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் சுடலைக்கண்ணு தலைமையில் அச்சங்க நிா்வாகிகள் அளித்த புகாா் மனு: ஸ்ரீபெரும்புதூா் முதல் காரப்பேட்டை வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலைக்காக அமைக்கும் பணிக்காக தம்மனூா் ஏரியிலிருந்து 40,000 க.மீ.மண் வெட்டி எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு 4 மாதங்களுக்கு குத்தகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதித்த 3 அடி ஆழத்தை விட அதிகமாக சுமாா் 18 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக கனிமம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏரியின் நீரியல் அமைப்பும் முற்றிலும் வீணாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஏரியில் மண் அள்ள வழங்கிய குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





