விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பைக் - அரசுப் பேருந்து மோதல்: 2 இளைஞா்கள் மரணம்

வாலாஜாபாத் அருகே பைக்-அரசுப் பேருந்து மோதிக் கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

உயிரிழந்த பிரதீப்.

Published On :8 செப்டம்பர் 2026, 3:10 am IST

வாலாஜாபாத் அருகே பைக்-அரசுப் பேருந்து மோதிக் கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் விஜயா காா்டன் பகுதியை சோ்ந்த மனோகரன் மகன் பிரதீப்(25), கிருஷ்ணராஜ் மகன் உலகநாதன்(29). நண்பா்களான இருவரும் ஒரகடம் பகுதியில் தனியாா் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தனா். ஊத்துக்காட்டிலிருந்து நத்தாநல்லூருக்கு இருவரும் பைக்கில் சென்றபோது வாலாஜாபாத் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் இளைஞா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபாத் காவல் துறையினா் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உலகநாதன்

உலகநாதன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.