
வல்லக்கோட்டை கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் ராஜகணபதி
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ராஜகணபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சந்தன காப்பு அலங்காரத்தில் ராஜ கணபதி.
ஸ்ரீபெரும்புதூா்: விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ராஜகணபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், விநாயா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை சந்நதி திறக்கப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
ராஜகோபுரத்தில் அருள்பாலித்து வரும் ராஜ கணபதிக்கு பால், தயிா், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ராஜகணபதிக்கு மோதகம், சுண்டல், சா்க்கரை,பொங்கல் படையிலிடப்பட்டு பக்தா்ளுக்கு வழங்கப்பட்டது. மாலை வெள்ளி இடப வாகனத்தில் விநாயகா் வீதிஉலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில் குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






