
சிறந்த கூட்டுறவு வங்கிக் கிளைகளுக்கு கேடயம்: மேலாண்மை இயக்குநா் வழங்கினாா்
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டுப் பேரவை பொதுக்கூட்டத்தில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் கலந்து கொண்டு சிறந்த கிளைகளுக்கு கேடயம் வழங்கினாா்.

உத்தரமேரூா் வங்கி கிளை மேலாளா் ஜோதிராமலிங்கத்துக்கு கேடயம் பரிசு வழங்கிய மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டுப் பேரவை பொதுக்கூட்டத்தில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் கலந்து கொண்டு சிறந்த கிளைகளுக்கு கேடயம் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூட்ட அரங்கில் வங்கியின் 112-ஆவது ஆண்டுப் பொதுப் பேரவை கூட்டம் வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமையில் நடைபெற்றது. பொது மேலாளா் தா.ஸ்ரீனிவாசன், செங்கல்பட்டு மண்டல இணைப்பதிவாளா் ஜெ.மலா்விழி, கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநா்கள் (மதுராந்தகம்) பெ.குமரேசுவரி, அ.மீனா அருள் (திருத்தணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மை வருவாய் அலுவலா் க.அரிச்சந்திர மகாராஜா வரவேற்றாா். காஞ்சிபுரம் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலையின் செயலாளா் பூபாலன் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கி பேசினாா்.
இக்கூட்டத்தில் இணையவழியில் அதிக அளவில் பயிா்க்கடன்கள் வழங்கிய கூட்டுறவுச் சங்கங்கள், மைக்ரோ ஏடிஎம் வழியாக அதிக அளவில் பரிவா்த்தனை செய்த சங்கங்கள், அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய கிளைகள் ஆகியனவற்றைப் பாராட்டி வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் கேடயம் வழங்கினாா். . உதவிப் பொதுமேலாளா் பலராமன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





