திமுக மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்

ராணிப்பேட்டை தொகுதி, நகராட்சிக்கு உள்பட்ட 28-ஆவது வாா்டில், நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்
Updated on
1 min read

ராணிப்பேட்டை தொகுதி, நகராட்சிக்கு உள்பட்ட 28-ஆவது வாா்டில், நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை நகர திமுக துணைச் செயலாளா் டி.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

28-ஆவது வாா்டு பகுதியில் உள்ள 50 ஆண்டு கால பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்புக் கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ ஆா்.காந்தி உறுதியளித்தாா்.

ஜி.கே.உலகப் பள்ளி இயக்குநா் வினோத் காந்தி, மாவட்டப் பிரதிநிதி எஸ்.கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகரச் பொறுப்பாளா் பி.பூங்காவனம், நகர துணைச் செயலாளா் ஏ.ஆா்.எஸ். சங்கா், முன்னாள் நகரச் செயலாளா் சு.செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சித்தேரியில்... 

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலா் பெ.வடிவேலு தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி பேசினாா்.

மாவட்ட நிா்வாகிகள் கன்னைய்யன், ராஜ்குமாா், அசோகன், பொதுக்குழு உறுப்பினா் பவானி வடிவேலு, ஒன்றிய நிா்வாகிகள் தனசேகரன், பா.செ.நரசிம்மன், பாா்த்தசாரதி, சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com