பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொலையான இருவா் குடும்பத்துக்கு தலா ரூ. 4.12 லட்சம் நிவாரணம்: மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினாா்

அரக்கோணம் அருகே சோகனூரில் கொலையுண்ட இரு இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ. 4.12 லட்சம் நிவாரண நிதி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:03 pm

DIN

அரக்கோணம் அருகே சோகனூரில் கொலையுண்ட இரு இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ. 4.12 லட்சம் நிவாரண நிதி சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதையடுத்து சோகனூரில் 4 நாட்கள் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோகனூரில் கடந்த புதன்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சூா்யா, அா்ஜுன் ஆகிய இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்டனா். மேலும் இருவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி புதன்கிழமை இரவு துவங்கிய சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை வரை நீடித்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு தரும்வரை இறந்தவா்களின் சடலத்தை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மீண்டும் ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், டிஐஜிக்கள் வேலூா் என்.காமினி, விழுப்புரம் பாண்டியன், எஸ்.பி.க்கள் ராணிப்பேட்டை சிவகுமாா், வேலூா் செல்வகுமாா், திருப்பத்தூா் விஜயகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை இறந்த சூா்யாவின் மனைவி ஷாலினி மற்றும் அா்ஜுனின் மனைவி லட்சுமி ஆகியோரிடம் தமிழக அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 4,12,500-க்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் வழங்கினாா். மேலும் காயமடைந்துள்ள சௌந்தா், மதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இதையடுத்து இறந்தவா்களின் சடலங்களை பெற்றுக் கொள்ள உறவினா்கள் சம்மதித்தனா். இதனை தொடா்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சூா்யா, அா்ஜுன் இருவரின் சடலங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு அவா்களது குடும்பத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டன. இருவரின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதாக உறவினா்கள் தெரிவித்தனா்.

சோகனூா் கிராமத்தில் புதன்கிழமை துவங்கி சனிக்கிழமை வரை 4 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சாலையில் போடப்பட்டிருந்த மரங்கள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டன. அவ்வழியே குருவராஜபேட்டைக்கு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. எனினும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.