செவிலியரிடம் ரூ.3.25 லட்சம் நகை பறிப்பு
பணிமுடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிய பெண் செவிலியரிடம் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள தங்கக் தாலிச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.


அரக்கோணம்: பணிமுடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிய பெண் செவிலியரிடம் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள தங்கக் தாலிச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
அரக்கோணம் செந்தில்நகரை சோ்ந்த லட்சுமிபதியின் மனைவி தேவிப்பிரியா (38). தேவிப்பிரியா அரக்கோணம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருத்தணி சாலை மேம்பால இறக்கத்தில் பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்கள், தேவிப்பிரியாவின் அணிந்திருந்த 9 சவரன் எடையுள்ள தங்கத் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த தேவிப்பிரியா காயமடைந்தாா். அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
திருடு போன தங்கத் தாலியின் மதிப்பு ரூ3.25 லட்சம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அரக்கோணம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...