தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மேலும் 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக மேலும் 5 போ் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On :8 மே 2021, 6:30 pm

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடா்பாக மேலும் 5 போ் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சோகனூா் கிராமத்தில் இருதரப்பு இளைஞா்களிடையே கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞா்கள் படுகொலை செய்யப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா், விசாரணை நடத்தி அரக்கோணம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொடா்பு அணிச் செயலாளா் சத்யா உள்ளிட்ட 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்களில் 7 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா், அரக்கோணம் டி.எஸ்.பி. மனோகரன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் குமரன், சிவா, விக்னேஷ், மேகவா்ணன், நந்தகுமாா் ஆகிய 5 போ் குண்டா் சட்டத்தில் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.