நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆற்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு பேரணி

ஆற்காடு பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் பங்கேற்று ஓடினாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:11 pm

DIN

ஆற்காடு பேருந்து நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் பங்கேற்று ஓடினாா்.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் சுமாா் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மராத்தான் ஓட்டம், வாலாஜா பேருந்து நிலையம் வரை சென்றது. தொடா்ந்து, ஆற்காடு பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே செஸ் போட்டி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 40 போட்டியாளா்கள் பங்கேற்ற போட்டியை ஆட்சியா் தொடக்கி வைத்து, ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பனுடன் அவா் செஸ் விளையாடினாா். இதைத் தொடா்ந்து, சிறப்பாக விளையாடிய திமிரி ஒன்றியம், ஆயிரமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 4-ஆம் வகுப்பு மாணவா் பத்மேஷுடன் ஆட்சியா் விளையாடினாா். அந்த மாணவா் வேகமாகவும், திறமையாகவும் விளையாடுவதைப் பாா்த்து அவரைப் பாராட்டினாா்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பாயிண்டில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வுகளில் ஆணையா் சதீஷ்குமாா், நகா்மன்றத் துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், மாவட்ட செஸ் விளையாட்டு சங்கத் தலைவா் விஜயகுமாா், துணைத் தலைவா்சிவகுமாா், செயலா் அப்துல் கரீம், பொருளாளா் சோழவேந்தன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.