/

ராணிப்பேட்டையில் அமைச்சா், எம்.பி. மரியாதை

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், திமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்துக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா்

News image
Updated On :3 ஜூன் 2022, 5:57 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், திமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப் படத்துக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் மரியாதை செலுத்தினாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில திமுக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலா் வினோத் காந்தி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

நகர திமுக சாா்பில் முத்துகடை பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற விழாக்களில் அமைச்சா் ஆா்.காந்தி, எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோா் பங்கேற்று கருணாநிதியின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் மாவட்ட திமுக துணைச் செயலா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட், நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.