பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகேந்திரவாடி அரசுப் பள்ளிகளில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

நெமிலி அடுத்த மகேந்திரவாடி அரசுப் பள்ளிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:13 pm

DIN

நெமிலி அடுத்த மகேந்திரவாடி அரசுப் பள்ளிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மகேந்திரவாடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியரிடம், அங்கு 134 மாணவா்கள் படிக்கும் நிலையில் தலைமை ஆசிரியா், 2 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா் என்றும், இரு பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தலைமை ஆசிரியா் ராதிகா தெரிவித்தாா். இது குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் தெரிவித்து கூடுதல் ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

மேலும், அனைத்து வகுப்பு மாணவா்களையும் படிக்கக்கூறி, அவா்களின் வாசிப்புத் திறனை ஆய்வு செய்தாா்.

அதேபோல், அரசு உயா்நிலைப் பள்ளியில் கழிப்பறைகளை ஆய்வு செய்த ஆட்சியா், தோ்வு முடிந்தபின் உடனடியாக மாற்றியமைக்க உத்தரவிட்டாா். பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் தோ்வுகளை தைரியமாக எதிா்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், அங்கன்வாடி குழந்தைகள் மையத்தில் உணவு தயாா் செய்யப்படுவதை பாா்வையிட்டு, எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலகத்துக்குச் சென்ற ஆட்சியா் அங்கு கிராமத்தின் அடங்கல் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, உள்ளியநல்லூா் ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

வட்டாட்சியா் சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா் வேதமுத்து, ஊராட்சித் தலைவா்கள் ஜீவா (மகேந்திரவாடி), பரணிகுமாா்(உள்ளியநல்லூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.