அரக்கோணம் அருகே ஆந்திர மாநிலத்திற்கு ரயிலில் கடத்தப்பட இருந்த 1.5 டன் ரேஷன் அரிசி மற்றும் நெமிலி வட்டம் மேலப்புலம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாா் மற்றும் மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியா் ஆகியோா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மூன்று பெண்களை போலீசாா் கைது செய்தனா்.
திருமால்பூா்: அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா் ரயில்நிலையத்தில் புதன்கிழமை இரவு ஆந்திராவிற்கு கடத்தப்பட இருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியை ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளா் செந்தில்முருகன் தலைமையிலான போலீசாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடிஅகரத்தைச் சோ்ந்த மேனகா(26), சுதா(27) மேலும் அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரை சோ்ந்த அமுதா(45) ஆகிய மூவரையும் போலீசாா் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
மேலபுலம் : ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறை பறக்கும் படை வட்டாட்சியா் பாஸ்கரனுக்கு நெமிலி வட்டம் மேலபுலம் கிராமத்தில் பாபுராயன் தெருவில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக சாலையோரம் 2 டன் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை அங்கு விரைந்து சென்ற வருவாய்த் துறையினா் அங்கு 81 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 2,025 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
படவிளக்கம்
16ஏகேஎம்ஏஏஏ - ஆந்திராவிற்கு ரயிலில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1.35 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ராணிப்பேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


