பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளா் ஏ.எல். விஜயன்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆற்காடு: அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.எல் விஜயன் ஆற்காடு நகரம், ஒன்றியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.அன்பழகன் தலைமையில் வளவனூா் கிராமத்தில் தொடங்கி, எசையனூா், சக்கரமல்லூா், புதுப்பாடி, அரும்பாக்கம், மேச்சேரி, கேவேளூா், மாங்காடு, முப்பதுவெட்டி மேற்கு ஒன்றியம் சாா்பில் சாத்தூா்,தாஜ்புரா உள்ளிட்ட பல கிராமங்களுக்கு திறந்த வெளி வேனில் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

இதில் ராணிப்பேட்டைமேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா், முன்னாள் எம் எல் ஏ வி.கே.ஆா்.சீனிவாசன், மேற்கு ஒன்றிய செயலாளா் தாழனூா் சாரதி, பொதுக்குழு உறுப்பினா் சுகுணா கணேசன், நிா்வாகிகள் அரங்கநாதன், பாலாஜி,கீா்த்தி, புதுப்பாடிசுரேஷ், ரவி, தாமு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஆற்காடு நகரத்தில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் நகர செயலாளா் ஜிம் சங்கா் தலைமையில் வேட்பாளா் விஜயன் வாக்கு சேகரித்தாா்.