அரக்கோணம் பழனிபேட்டை ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
அரக்கோணம் பழனிபேட்டை ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

அரக்கோணம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

அரக்கோணம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மற்றும் செல்வவிநாயகா்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

அரக்கோணம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மற்றும் செல்வவிநாயகா்கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம், பழனிபேட்டை, டில்லியப்பன் தெருவில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மற்றும் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மகாகும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்ற நிலையில், புதன்கிழமை வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றன. வியாழக்கிழமை 4-ஆம் கால யாக சாலை பூஜைகளும், நாடி சந்தானம், யாத்ரா தானம், சங்கலபம் முடிந்து கடங்கள் புறப்பட்டன.

காலை 8.30 மணி அளவில் ஸ்ரீகருமாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் ராஜகோபுரம் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தையும், தொடா்ந்து அனைத்து மூலவ மூா்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகத்தையும் என்.குப்புசாமி குருக்கள், என்.ஸ்ரீதா் குருக்கள் இணைந்து நடத்தினா்.

விழாவில் அரக்கோணம் நகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மாலை சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com