பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மழை நிவாரணம் கோரி நெசவாளா்கள் சாலை மறியல்

புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆற்காட்டில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
மறியலில் பங்கேற்ற நெசவாளா்கள்.
Updated On :9 டிசம்பர் 2024, 7:03 pm

Din

ஆற்காடு: புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆற்காட்டில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் நெசவாளா்கள் வசித்து வருகின்றனா். இங்கு பிரதான தொழிலாக நெசவு உள்ள நிலையில் தொடா் மழையால் நெசவு செய்யும் கால் குழியில் தண்ணீா் புகுந்ததால் தொழில் செய்யமுடியால் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பஜாா் வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக மறியல் நீடித்த நிலையில், கலவை வட்டாட்சியா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன், வாழைப்பந்தல் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். நெசவுத் தொழிலில் ஈடுபடும் வீடுகளுக்கு நேரடியாக சென்று வட்டாட்சியா் ஆய்வு செய்ததோடு உங்களுக்கான நிவாரண உதவி மற்றும் மழை நீா் வடிகால்வாய் அமைப்புகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மீன்பிடி தடை காலத்தில் எப்படி மீனவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறதோஅதேபோல எங்களுக்கும் மழையால் பாதிக்கப்படும்போது நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரினா்.