மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பூந்தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தைச் சோ்ந்த ராமனின் மனைவி தனலட்சுமி (60), சிற்றரசுவின் மனைவி சிவகாமி (61). பூப்பறிக்கும் தொழிலாளிகளான இருவரும் வெள்ளிக்கிழமை அந்த கிராம பூத்தோட்டத்தில் பணியில் இருந்தனா். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த சிவகாமி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com