தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திமிரியில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்க அடிக்கல்

திமிரியில் கழிவு நீா் கால்வாய், சிமெண்ட்சாலைகள் அமைக்க பூமி பூஜை

Updated On :14 மார்ச் 2024, 5:38 pm

ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 20 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு, பேரூராட்சி தலைவா் மாலா இளஞ்செழியன் தலைமை வகித்து, திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் கௌரி தாமோதரன் செயல் அலுவலா் (பொறுப்பு) ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை பொறியாளா் அருண், பேரூராட்சி உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.