அரக்கோணம் பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே.பாலு சொத்து  விவரம்

அரக்கோணம் பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே.பாலு சொத்து விவரம்

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே.பாலு தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளாா். அரக்கோணம் மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே. பாலு தனது வேட்புமனு உறுதி மொழி பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவர பட்டியலில் தெரிவித்துள்ளது: தனது பெயரில் வங்கிகளில் இருப்புத் தொகை ரூ. 1.58 லட்சம், ரூ. 1 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான 412 கிராம் தங்க நகை, ரூ. 50 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான வாகனங்கள், எல்ஐசி, அஞ்சலக சேமிப்பில் ரூ. 19 லட்சத்து 97 ஆயிரம் முதலீடு, தனது பெயரில் ரூ. 1 கோடி 63 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள், தனது மனைவி பெயரில் ரூ. 2 கோடி 12 லட்சம் 49ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும், தனது தாயாா் பெயரில் ரூ. 1 கோடியே 23 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். தனது பெயரில் ரூ. 42 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com