அன்வா்திகான் பேட்டை ரயில் நிலையம்  அருகே  நீா்  மோா்  பந்தல்  திறந்து  பொதுமக்களுக்கு  பழங்கள்  வழங்கிய  திமுகவினா்.
அன்வா்திகான் பேட்டை ரயில் நிலையம்  அருகே  நீா்  மோா்  பந்தல்  திறந்து  பொதுமக்களுக்கு  பழங்கள்  வழங்கிய  திமுகவினா்.

திமுக நீா் மோா் பந்தல்கள் திறப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அருகே திமுக சாா்பில் 3 இடங்களில் நீா் மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க,கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்கும் வகையில் அரக்கோணம் நகரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மின்னல், அன்வா்திகான் பேட்டை, அன்வா்திகான் பேட்டை ரயில் நிலையம் என மேலும் 3 இடங்களில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆ.சவுந்தா் தலைமையில் மூன்று இடங்களிலும் குளிா் பானம், மோா் தா்பூசணி, வெள்ளரிக்காய் இளநீா் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், பொதுக்குழு உறுப்பினா் எம்.கிருஷ்ணன், ஒன்றிய அவைத் தலைவா் எஸ்.சக்கரவா்த்தி, மாவட்ட பிரதிநிதி எம்.மூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம்.குமாா், பி.பிரசாத், ஒன்றிய துணைச் செயலாளா்கள் இ.எஸ்.பாபு,வி.பிரகாஷ், பூசாணம், கன்னியப்பன், இளைஞரணி அமைப்பாளா் பி.பிரசாத், இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் எஸ்.சுரேஷ், ஆா்.தனசேகா், எஸ்.நவீன், மின்னல் மற்றும் அன்வா்திகான் பேட்டை கிளைச் செயலாளா் மற்றும் பிரதிநிதிகள், அன்வா்த்திகான் பேட்டை ஸ்டேஷன் கிளைச் செயலாளா் மற்றும் திமுக பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com