போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ரத்தினகிரியில் வைகாசி விசாகம் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ரத்தினகிரியில் வைகாசி விசாகம் பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image

மயில் கொடி ஏற்றும் பாலமுருகனடிமை சுவாமிகள்

Updated On :14 மே 2024, 6:52 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி வள்ளி ,தெய்வனை சமேத பாலமுருகன் கோயிலில் 2-ஆம் ஆண்டு வைகாசி விசாகம் பிரம்மோற்சவ கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வைகாசி விசாகம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கிராம தேவதை பூஜை நடைபெற்றது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலாவும், செவ்வாய்க்கிழமை மலை கோயிலில் உள்ள கொடிமரத்தில் மயில் கொடியேற்றப்பட்டது.

தொடா்ந்து கேடயஉலா உற்சவமும், மாலையில் அங்கரிக்கப்பட்ட உற்சவா் அன்னவாகனத்தில் வீதி உலா வந்தாா். நாள் தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும், 22-ஆம் தேதி புதன்கிழமை தேரோட்டமும், நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது.