சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கை மனுக்களை நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகனிடம் வழங்கிய  உறுப்பினா் டி.கோபால்.
சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கை மனுக்களை நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி அசோகனிடம் வழங்கிய உறுப்பினா் டி.கோபால்.

சோளிங்கா் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை திறப்பு எப்போது?: காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் கேள்வி

சோளிங்கா் நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால் கேள்வி எழுப்பினாா்.
Published on

அரக்கோணம்: சோளிங்கா் நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் டி.கோபால் கேள்வி எழுப்பினாா்.

சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழரசிஅசோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவா் பழனி, நகராட்சி ஆணையா் சீனிவாசன் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

டி.கோபால்(காங்கிரஸ்): சோளிங்கா் புதிய பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள காமரஜா், அம்பேத்கா் உருவச்சிலைகளை இடம் மாற்றாமல் அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும். திருத்தணி சாலையில் ரூ1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்?. சோளிங்கரில் ஒரு வழிப் பாதையை அமல்படுத்த வேண்டும். அரக்கோணம் சாலையில், கருமாரியம்மன் கோயில் அருகே சேமடைந்துள்ள கழிவுநீா் கால்வாயை அகற்றி புதிய கால்வாய் கட்ட வேண்டும். ஸ்ரீலட்சுமிநரசிம்மா் மலைக்கோயிலுக்குச் செல்ல வாகனங்களுக்கு 2 மாதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ள சுங்கவரி வசூலை ஒரு மாதம் மட்டுமே என மாற்ற வேண்டும்.

கணேசன்(காங்கிரஸ்): எசையனூா் பகுதியில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல மின்விளக்குகள் பழுதான நிலையில் உள்ளதை உடனே மாற்ற வேண்டும்.

ஆஞ்சநேயன்(சுயே): பில்லாஞ்சி பகுதியில் மழைநீா் மற்றும் கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கப்படாத நிலை உள்ளது. இவற்றை விரைவில் அமைத்து தர வேண்டும். பல தெருக்களில் மின்விளக்குகளே இல்லாத நிலை உள்ளது. அவைகளை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com