ராணிப்பேட்டை
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
ராணிப்பேட்டையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் திமுக வில் இணைந்தனா்.
ராணிப்பேட்டையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் திமுக வில் இணைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில், அதிமுக, பாமக உள்பட மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 100- க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா். நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.