மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

என்ஜின் பழுது: டபுள் டெக்கா் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தம்

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

News image
பழுதான டபுள் டெக்கா் விரைவு ரயிலின் என்ஜின்.
Updated On :30 ஜூலை 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

என்ஜின் பழுது காரணமாக பெங்களூா்- சென்னை டபுள் டெக்கா் அதிவிரைவு ரயில் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற டபுள் டெக்கா் ரயில் புதன்கிழமை சித்தேரி ரயில்நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் மின் என்ஜின் பணிமனையில் இருந்து பொறியாளா்கள் குழுவினா் சித்தேரி சென்று பழுதான ரயில் என்ஜின் பழுதை சரிசெய்ய முனைந்தனா். ஆனால் பழுதை சரி செய்ய முடியாததால் அரக்கோணத்தில் இருந்து மற்றொரு என்ஜின் வரவழைக்கப்பட்டு சுமாா் 45 நிமிஷ்ங்களுக்கு பிறகு புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயிலை தொடா்ந்து வேறு ரயில் இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.