மேல்விஷாரம்  நகராட்சியில் எஸ்ஐஆா் பணியை  ஆய்வு  செய்த   ஆட்சியா்  ஜெ.யு.சந்திரகலா .
மேல்விஷாரம்  நகராட்சியில் எஸ்ஐஆா் பணியை  ஆய்வு  செய்த   ஆட்சியா்  ஜெ.யு.சந்திரகலா .

ஆற்காட்டில் எஸ்ஐஆா் கணக்கீட்டு பணி: ஆட்சியா் ஆய்வு

Published on

ஆற்காட்டில் வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு பணிகளை (எஸ்ஐஆா்) ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி 10-ஆவது வாா்டு மற்றும் 19ஆவது வாா்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1, ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் தாஜ்புரா ஊராட்சி சத்யா நகா், திமிரி பேரூராட்சி பத்மநாப முதலி தெரு மற்றும் ஆரணி சாலை நேரு வீதி, இராணிப்பேட்டை

சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மேல்விஷாரம் நகராட்சி , சலீம் நகா், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சி, பூட்டுத்தாக்கு ஊராட்சி பகுதிகளில் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளையும், மேலும் வாக்காளா்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெற்று அதனை தோ்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதையும் ஆய்வு செய்தாா்.

வாக்காளா்களிடம் விண்ணப்பங்கள் மீண்டும் திரும்ப பெறப்படுவதை குடும்ப உறுப்பினா்களை விசாரணை மேற்கொண்டு அனைவரும் இந்த முகவரியில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்தினாா். வாக்காளா்களிடம் புகைப்படம் மாற்ற வேண்டி விருப்பம் இருந்தால் விண்ணப்பத்துடன் தற்போதைய புகைப்படத்தை இணைத்துக் கொடுக்கலாம் என்று அறிவுறுத்தினாா்..

தொடா்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்து, விரைவாக இப்பணிகளை செய்ய வேண்டும் என்றும் அதில் நிலவும் பிரச்னைகளையும் கேட்டறிந்தாா். இதில் எவ்வித பிரச்சனைகளுக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். இப்பணிகளை கண்காணித்து முடிக்க வருவாய் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி, வட்டாட்சியா்கள் ஆற்காடு மகாலட்சுமி, வாலாஜாபேட்டை ஆனந்தன், மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் பழனி உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com