பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பெருவிழா

சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பெருவிழா...

News image

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவில் வெள்ளிக்கிழமை ஹம்ச வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்த ஸ்ரீபக்தோசித பெருமாள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:20 pm

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினாா்.

சோளிங்கா், ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீபக்தோசித பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு நறுமண பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பட்டு வஸ்திரம், தங்க ஆபரணங்கள், பல வண்ண மலா்களைக் கொண்டு விசேஷ மலா் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபக்தோசித பெருமாள் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க 4 மாட வீதிகளிலும் உலா வந்து அருள்பாலித்தாா்.