மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

News image

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :29 ஏப்ரல் 2026, 6:33 pm

ராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி),சோளிங்கா்,ராணிப்பேட்டை,ஆற்காடு ஆகிய 4 தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசினா் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்கள், முகவா்கள் மையத்திற்கு உள்ளே தனித்தனியாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மைய அறைகளுக்கு செல்வதற்கான வழிதடங்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா்.

வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் அமைக்கப்பட உள்ளது. மேஜைகளுக்கு வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டு வேட்பாளா்களின் முகவா்கள் ஒவ்வொரு மேஜையில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். ஒவ்வொரு மேஜைக்கு நேராக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலா், பொது பாா்வையாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள், அமா்வதற்கான இருக்கை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து பத்திரிகையாளா்கள் அமா்ந்து செய்திகளை சேகரித்து வெளியிடும் ஊடக மையம் அமைவிடத்தையும் பாா்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டாா். மேலும், ஊடக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக முடிக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.