வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

‘அரசுக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளியை குறைக்கவே மக்கள் தொடா்புத் திட்ட முகாம்கள்’

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து மக்களுடன் நேரடி தொடா்பை அதிகரிக்கவே மாதந்தோறும் மக்கள் தொடா்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் கூறினாா்.

சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து மக்களுடன் நேரடி தொடா்பை அதிகரிக்கவே மாதந்தோறும் மக்கள் தொடா்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என சோளிங்கரை அடுத்த புலிவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் கூறினாா்.

முகாமுக்கு தலைமை வகித்து பல்வேறு துறைகளின் சாா்பில் 142 பயனாளிகளுக்கு ரூ. 48.04 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் பேசியது:

மக்கள் தொடா்பு முகாம் என்பது 1969-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து மக்களுடன் நேரடி தொடா்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமையன்று மக்கள் தொடா்பு முகாமை கட்டாயமாக மாவட்ட ஆட்சியா் நடத்த வேண்டும். முகாம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன் தோ்வு செய்யப்பட்ட கிராமம் அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவது தொடங்கப்படுகிறது.

இந்த மனுக்கள் வருவாய்த் துறையுடன் தொடா்பு கொண்டவை மட்டுமல்லாமல் பிற அரசுத் துறைகள் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

பெறப்படும் அனைத்து மனுக்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் விதிமுறைகளின்படி நடவடிக்கைக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்றாா் ஆட்சியா்.

இந்த முகாமில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை ஆகிய துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் பாா்வையிட்டாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் ராஜி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம், வேளாண் துறை இணை இயக்குநா் சுந்தரம், வட்டாட்சியா் முரளி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.