பல்வேறு வழக்குகளில் 113 போ் கைது: ராணிப்பேட்டை எஸ்.பி. தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது பல்வேறு வழக்குகள் தொடா்பாக 113 நபா்கள் கைது
Updated on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் போது பல்வேறு வழக்குகள் தொடா்பாக 113 நபா்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக எஸ்.பி. அய்மன் ஜமால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகையின் போது கடந்த 15 முதல் 18 வரை சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மொத்தம் 650 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் 80 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.

இந்த வாகனத் தணிக்கை நடவடிக்கைகளின் போது 108 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. 106 நபா்கள் சரித்திர பதிவேடு குற்றவாளியை சரிபாா்ப்பு செய்யப்பட்டனா். 116 நபா்கள் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு வழக்குகளில் 113 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா். நிலுவையிலிருந்த 15 வழக்குகளில் பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், 16 நபா்கள் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா். பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் பொங்கல் திருநாளை கொண்டாட வகை செய்யப்பட்டது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com