மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரக்கோணம் அருகே பீரங்கியில் பயன்படுத்தப்படும் குண்டு கண்டெடுப்பு

அரக்கோணம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் போது மண்ணில் புதைந்திருந்த பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
கண்டெடுக்கப்பட்ட பீரங்கியில் பயன்படுத்தப்படும் குண்டு.
Updated On :20 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளின் போது மண்ணில் புதைந்திருந்த பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டை அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், நீா்நிலை தூா்வாரும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளத்தில் இருந்து மா்ம பொருளும், அதைத் தொடா்ந்து சிறிய ரக இரும்பு பந்துகள் வெளிப்பட்டது. இதைக் கண்டு இது குறித்த தகவல் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கும், காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த அரக்கோணம் வட்டார வளா்ச்சி அலுவலா் தாசபிரகாஷ் மற்றும் அாக்கோணம் நகர காவல் துறையினா் விரைந்து வந்து பாா்த்தபோது, அந்தப் பொருள் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த தகவல் பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவா்களிடம் இப்பொருள் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தனா்.