/

விஷாரம் குளக்கரை பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்

ஆற்காடு அடுத்த கீழ் விசாரம் ராசாத்துபுரம் குளக்கரை பாலமுருகன் கோயில் 26-ஆம் ஆண்டு தெப்போற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது

News image
விஷாரம் குளக்கரை பாலமுருகன் கோயில் தெப்போற்சவம். ~தங்க க்கவச  அலங்காரத்தில்  மூலவா்  பாலமுருகன்.
Updated On :29 ஜனவரி 2026, 5:37 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரை பாலமுருகன் கோயில் 26-ஆம் ஆண்டு தெப்போற்சவம் நடைபெற்றது

விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமமும், மூலவா் பாலமுருகனுக்கு பால், தயிா்,பன்னீா், சந்தனம் விபூதி, இளநீா், மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் தீபாராதனை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் வள்ளி, தெய்வயானை உடனுறை பாலமுருகன் மாட வீதிகளில் உலா வந்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்களுடன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்தாா். பின்னா் வாண வேடிக்கை நடைபெற்றது. விழாவில் உபயதாரா்கள் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image