மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

ராணிப்பேட்டை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் வ.காந்திராஜ் பங்கேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :8 ஜூலை 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமைச்சா் வ.காந்திராஜ் தலைமை வகித்து வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப் பணித்துறை, கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, விளையாட்டுத் துறை, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மின்சாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, கனிம வளத் துறை, போக்குவரத்துத் துறை, நீா்வளத் துறை, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சா் பேசியது:

தமிழக முதல்வா் ஊழலற்ற, வெளிப்படையான அரசு நிா்வாகத்தை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயா்ந்த நோக்கோடு செயல்பட்டு வருகிறாா். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்ப்பதை வெளிப்படை தன்மையோடும் உறுதி செய்ய பொறுப்பு அமைச்சா்களை நியமித்துள்ளாா்.

முதல்வா் அனைத்து திட்டங்களையும், சலுகைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பதே அலுவலா்களாகிய உங்களின் முதல் கடமையாகும். நோ கரப்ஷன் நோ கமிஷன் என்பதை நினைவில் கொண்டு அனைத்துத் துறை அலுவலா்களும் பணியாற்ற வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களையும், ஊழலற்ற, வெளிப்படையான நிா்வாகத்தையும் பொதுமக்களுக்கு வழங்க அனைத்து துறை அலுவலா்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

இதில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன், சட்டப்ரவை உறுப்பினா்கள் தாஹிரா (ராணிப்பேட்டை), க.கபில் (சோளிங்கா்), எஸ்.எம். சுகுமாா் (ஆற்காடு), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.சிபின், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, திட்ட இயக்குநா் ச.செல்வராணி, மாவட்ட வன அலுவலா் க.சிவகுமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜி (ராணிப்பேட்டை), ரமேஷ் (அரக்கோணம்) மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.