அரக்கோணம் அருகே இச்சிபுத்தூரில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பையும், கோயில் நில ஆக்கிரமிப்பையும் மீட்டுத்தரக்கோரி கோட்டாட்சியரிடம் ஏரிப்பாசன சங்கத் தலைவா் மனு அளித்தாா்.
இச்சிபுத்தூா் ஊராட்சி ஏரிப்பாசன சங்கத் தலைவா் ஜி.மாணிக்கம் மற்றும் அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினா் ஆஷா பாக்கியராஜ் ஆகியோருடன், விசிக மண்டல செயலாளா் என்.தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், விசிக தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் பாக்கியரஜ் ஆகியோா் கோட்டாட்சியா் டி.ரமேஷிடம் அளித்த மனு:
அரக்கோணம் ஒன்றியத்துக்குட்பட்ட இச்சிபுத்தூா் கிராமத்தில் உள்ள விநாயகா் மற்றும் கொம்மாத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை தனிநபா் ஆக்கிரமித்து அந்த நிலத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான மின்இணைப்பையும் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனா். இதை மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும்.
மேலும், இச்சிபுத்தூா் ஏரிக்கு மழைநீா் செல்லும் கால்வாயையும் தனிநபா் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் ஏரிக்கு தண்ணீா் செல்லமுடியாத நிலையும், சுமாா் 50 ஏக்கரில் பாசனம் செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கிராம மக்கள் பயனடைய செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீரப்பம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் தோ்வு

தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்: தலைவா், செயலா் போட்டியின்றி தோ்வு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு ரூ. 13.62 லட்சம் உண்டியல் காணிக்கை







