/

போதைப் பொருள் பயன்பாடு சட்ட விழிப்புணா்வு முகாம்

போதை பொருள் இல்லாத இந்தியா 2026 குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் காவேரிபாக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு முகாமில் பேசிய ராணிப்பேட்டை சாா்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.முனுசாமி.

Updated On :16 ஜூலை 2026, 12:04 am IST

போதை பொருள் இல்லாத இந்தியா 2026 குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் காவேரிபாக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தில் உள்ள காவேரிபாக்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடைபெற்ற முகாமுக்கு ராணிப்பேட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.முனுசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் தமிழ்தென்றல் வரவேற்றாா். இம்முகாமில் கல்லூரி மாணவா்களுக்கு போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சட்டசேவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து பகடிவதை பாதிப்பு குறித்தும், பகடிவதை தடுப்பு சட்டம் வந்த காரணம் பற்றியும் பகடிவதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் ராணிப்பேட்டை நீதிமன்ற வழக்குரைஞா்கள் விஜயலட்சுமி, ராம்குமாா், வாலாஜாபேட்டை நீதிமன்ற வழக்குரைஞா் சங்க செயலாளா் ஸ்ரீதரன், வழக்குரைஞா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கல்லூரியின் தமிழ்துறை தலைவா் தாட்சாயினி நன்றி தெரிவித்தாா். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.