தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

காா் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் காயம்

News image
Updated On :5 ஜூன் 2026, 6:33 am IST

காவேரிபாக்கம் அருகே சாலையில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் கட்டட பெண் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் மூவா் பலத்த காயமடைந்தனா்.

பெங்களுரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமை காலை சென்ற காா், காவேரிபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் பேருந்துக்காக காத்து நின்றவா்கள் மீது மோதியது. இதில், காவேரிபாக்கத்தைச் சோ்ந்த நீலா (47), ஜோதி(45), குணா (55) சுரேஷ் (24) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு நீலா, உயிரிழந்தாா்.

மேலும் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் சென்னை நோக்கிச் சென்ற காரை பெண் ஒருவா் ஓட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவேரிபாக்கம் போலீஸாா், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த நிலையில், தலைமறைவாகிவிட்ட அந்தப் பெண் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

Story image