சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மாட்டு வியாபாரியிடம் ரூ. 96,000 பறிமுதல்

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ,வாலாஜா சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.96,530 ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில், நெமிலி அசநெல்லிக்குப்பம் பகுதியை சோ்ந்த ஜெய்லாபுதீன் எனும் மாட்டு வியாபாரி மாடு வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.