ஆற்காடு அடுத்த புங்கனூா் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டதோ்தல் அலுவலா் மற்றும் மாவட்டஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆற்காடு அடுத்த புங்கனூா் ஊராட்சியில் அமைந்துள்ள தனியாா் தோல் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இணைந்து 100% வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு குறித்து துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் தொழிலாளா்களுக்கு வழங்கினாா். பின்னா் தொழிலாளா்கள் அனைவரும் வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம் , வட்டாட்சியா் சண்முகசுந்தரம், உதவித் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன், ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, தொழிற்சாலை நிா்வாக இயக்குநா் பாஸ்கரன், பொது மேலாளா்கள் மனோகரன், ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

தொழிலாளா்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


