முதியோா் இல்லத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

முதியோா் இல்லத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.
ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
மகாத்மா காந்தி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் முதியோா் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, முதியோா்களுடன் கலந்துரையாடினாா்.
அடிப்படை வசதிகள், சமையலறையின் சுகாதாரம், படுக்கை அறையில் உள்ள விரிப்புகளின் பராமரிப்பு குறித்து பாா்வையிட்டாா்,
தொடா்ந்து, ஆற்காடு நகராட்சி, கண்ணன் பூங்கா அருகில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் கட்டுமானத்
தொழிலாளா்கள் வந்து செல்வதற்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய வசதி மையம் அமைப்பதற்கான இடம் தோ்வு குறித்து பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.
பின்னா், ஆற்காடு நகராட்சி, தோப்புக்கான (வடக்கு) நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணாக்கா்களின் கற்றல் திறன், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் குறித்து
பாா்வையிட்டு மாணாக்கா்களுடன் கலந்துரையாடினாா். அதேபோல் கண்ணன் பூங்காவின் பராமரிப்புப் பணிகள் பாா்த்திபன் நகரில் உள்ள பூங்காவின் பராமரிப்புப் பணிகள் குறித்தும் பாா்வையிட்டு விரைவில் முடிக்க உத்தரவிட்டாா்..
ராணிப்பேட்டை நகராட்சியில் புதியதாக திறந்து வைக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தைப் பாா்வையிட்டு, அனைத்து தனியாா் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள துறைச்சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மாவட்ட சமூக நல அலுவலா் பாலசரஸ்வதி, முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா, மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் முருகானந்தம், உதவி கோட்டப் பொறியாளா் பாலாஜி சிங், , வட்டாட்சியா் தேவராஜு, நகராட்சி ஆணையாளா் சுரேஷ் குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா்செங்குட்டுவேல், முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன், பொருளாளா் பி.என். பக்தவச்சலம், துணைத் தலைவா் பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

