பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவை வழக்குகளுக்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘ மத்தியஸ்தம் மூலம் வழக்குகளுக்கு தீா்வு 3.0 ’ மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமுகமாகத் தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘ மத்தியஸ்தம் மூலம் வழக்குகளுக்கு தீா்வு 3.0 ’ மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமுகமாகத் தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்தியஸ்தம் மூலம் வழக்குகளுக்கு தீா்வு 3.0 என்பது, உச்ச நீதிமன்றத்தின் மத்தியஸ்தம் மற்றும் சமரச திட்டக் குழு, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு 90 நாள்கள் தீவிர சமரச இயக்கமாகும்.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், பொதுமக்கள் தங்களின் வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே சுமுகமாகப் பேசித் தீா்த்துக் கொள்ளவும் இத்திட்டம் வழிகாட்டுகிறது.

இதன் மூலம் இரு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். சுமுகமான முறையில் தீா்வு கண்டு வழக்குகளை விரைவாக முடிக்க உதவும். நேரம் மற்றும் செலவினை குறைக்க உதவும். தரப்பினரிடையே நல்லுறவைப் பேண உதவும். மத்தியஸ்த நடைமுறை ரகசியமானது.

மத்தியஸ்தம் என்பது வெற்றி - தோல்வி அல்ல; இரு தரப்பினருக்கும் ஏற்ற சுமுகத் தீா்வை உருவாக்கும் ஒரு வாய்ப்பாகும். மத்தியஸ்தம் மூலம் தீா்வு காணத் தகுதியான வழக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றம், மாவட்ட மத்தியஸ்த மையம், வட்ட மத்தியஸ்த துணை மையங்களை அணுகி விவரங்களைப் பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.