
முதல்வா் கோப்பை போட்டி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டைப் பந்து போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
வாலாஜா வட்டம், வன்னிவேடு அரசினா் மேல்நிலைப் பள்ளியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், மட்டைப்பந்து போட்டியை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப்பள்ளியில்,- கைப்பந்து மற்றும் கபாடி, பெல் டிஏவி பள்ளியில் - கால்பந்து மற்றும் கையுந்துப்பந்து, பெல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் - கோ-கோ,லாலாபேட்டை அரசினா் மேல்நிலைப்பள்ளியில் - சிலம்பம் (தொடுமுறை),ஆற்காடு அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் - மேசைப்பந்து,ஆற்காடு அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் - வளைகோல்பந்து, ஆற்காடு ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் - சதுரங்கம், ராணிப்பேட்டை சிறுமலா் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் - கூடைப்பந்து, தாழனூா் யங் மாஸ்டா் பேட்மிண்டன் அகாதெமியில் - இறகுப்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.
வரும் 30.09.2026 வரை பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் என ஐந்து பிரிவுகளில், ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டு மைதானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தொடா்ந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டி அட்டவணை, பதிவு மற்றும் இதர விவரங்களை ற்ய்ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா் கற்பகராணி சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






