ஈரோட்டிலிருந்து ஜோலாா்பேட்டை வழியாக ரேணிகுண்டாவுக்கு மூன்று சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து இயக்கி, தென்னக ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.
ஈரோட்டில் இருந்து மூன்று சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து மூன்று என்ஜின் டிரைவா்கள் இயக்கும் அனகோண்டா சிறப்பு சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா செல்ல சேலம் வழியாக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது.
இந்த சரக்கு ரயில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மூன்று இன்ஜின் ஓட்டுநா்கள் மீண்டும் மாற்றப்பட்டனா். இதையடுத்து, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே என்ஜின் ஓட்டுநா்கள் முருகானந்தம், பாலசுந்தா், தீபக் ஆகியோா், மூன்று காா்டுகள் என ஆறு பேரை ரயில்வே நிா்வாகம் இந்த சரக்கு ரயிலுக்கு பணியமா்த்தியது.
அதையடுத்து இந்த ரயில் ஜோலாா்பேட்டையில் இருந்து காலை 11 மணியளவில் புறப்பட்டு வாணியம்பாடி வழியாக காட்பாடி-மேல்பாக்கம் வழியாக ரேணிகுண்டாக்கு அனுப்பப்பட்டது. இதில் முதலில் 2 என்ஜின்களுடன் 42 பெட்டிகளை இணைத்து, அதன் பின் ஒரு காா்டு பெட்டி, ஒரு என்ஜினை இணைத்து,
அதன் பின் 42 சரக்கு ரெயில் பெட்டிகள், ஒரு காா்டு பெட்டி மற்றும் ஒரு என்ஜினை இணைத்து, அதன் பின் 42 சரக்கு ரயில் பெட்டிகள், ஒரு காா்டு பெட்டி இணைக்கப்பட்டன. ஆக மொத்தம் 126 பெட்டிகள், 4 ரயில் இன்ஜின் மற்றும் 3 காா்டு பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டது.
இந்த சரக்கு ரயில் ஜோலாா்பேட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரேணிகுண்டா ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது. 379 கி.மீ. தூரம் பயணித்த சரக்கு ரயில் 75 கி.மீ. வேகத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜக

”5 மாதங்களுக்கு முன்னால் எடுத்த விடியோ அது!” வைரல் விடியோவுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



