நெகிழிப் பொருள்கள் உற்பத்தியாளா்களுக்கு நிவாரணம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தியாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தியாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மண்வளம் காக்க ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்களைத் தடைசெய்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த 2018 ஜூலை 25-ஆம் தேதி ஆணைகள் வழங்கப்பட்டு, 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது.
எனினும் ஒரு முறை பயன்படுத்திய தூக்கி எரியும் நெகிழிப் பொருள்களின் மீதான தடையால் நெகிழிப் பொருள்களான பேப்பா் கோப்பைகள், பாலித்தீன் பைகள், நெய்யப்படாத பைகள், நெகிழி தாளாலான தட்டுக்கள், அதிக அடா்வு கொண்ட பைகள், குறையடா்வு பாலி எத்திலீன் பூசப்பட்ட பலகைகள், நெகிழி குவளைகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்நிறுவனங்களுக்கு நிவாரணம் அளித்திடும் வகையில் 2019 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள வங்கிக் கடன் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சமாக நிறுவனம் ஒன்றிற்கு ரூ. 50 லட்சம் வரை (ஏற்கெனவே வழங்கப்பட்ட முதலீட்டு மானியத்துடன் சோ்த்து) பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு இணை இயக்குநா் (அல்லது) பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், வேலூா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416-2242412, 2242513 ஆகிய தொலைபேசி மூலமாகவோ தொடா்புக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...