இந்திய தேசிய லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், ஆம்பூா் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தேசிய லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read


ஆம்பூா்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், ஆம்பூா் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட அமைப்பாளா் அயூப்கான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அஸ்லம் பாஷா சிறப்புரையாற்றினாா். நகரத் தலைவா் ரிஸ்வான், நகரச் செயலா் சல்மான், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றத்தினா்...: தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில், வருவாய்த் துறை கிராமச் சாவடி எதிரில் மாநில பொதுச் செயலாளா் நேய.சுந்தா் தலைமையில், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கா் மன்ற நிா்வாகிகள் முல்லைமாறன், விமல், ஜேசுபாதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com