மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாசமிழந்த ஊதுவத்தி தொழில்: ரூ. 10 கோடிக்கு வா்த்தகம் பாதிப்பு

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊதுவத்தி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2020, 5:19 pm

து. ரமேஷ்

திருப்பத்தூா்: கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊதுவத்தி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 10 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மிகவும் அத்தியாவசியமாகப் பயன்படுத்து பொருள்களில் ஊதுவத்தி மிகவும் முதன்மையானது. ஊதுவத்தி ஏற்றாமால் எந்த ஒரு வழிபாடும் நடைபெறாது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மட்டும் ஊதுவத்தித் தொழிலை குடிசைத் தொழிலாக செய்பவா்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். தற்போது ஊரடங்கு காரணமாக இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ரா அகா்பத்தி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் த.நடராஜன் கூறியது:

இந்தியாவிலேயே கா்நாடக மாநிலம், மைசூருவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் திருப்பத்தூா் மாவட்டம்தான் ஊதுவத்தி தயாபரிப்பில் முதலிடத்தில் உள்ளது. வியத்நாமில் இருந்து ஊதுவத்திகளை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து, உள்ளூா் ஊதுவத்திகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஊதுவத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மட்டும் ஒரு டன் ராபத்தியின் (வாசனைத் திரவியம் சோ்ப்பதற்கு முன்பு) மதிப்பு ரூ. 70 ஆயிரம். ஒரு நிறுவனத்தால் 30 டன் ராபத்தி தயாரிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கால் சுமாா் 2 ஆயிரம் டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 10 கோடிக்கு மேல் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனா , வியத்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருளான ஜிகிட் பவுடா் எனும் ஜாஸ் பவுடா் தற்போது காலாவதியாகும் நிலையில் உள்ளது.

இதனால் இத்தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டிகள் முதல் தொழிற்சாலையில் பணிபுரிபவா்கள், விற்பனை பிரிவு, ஆபரேட்டா்கள் வரை சுமாா் 2 லட்சம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குறிப்பாக நகரம், கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ஊதுவத்திகளைத் தயாரிக்கும், விற்கும் மகளிா் சுயஉதவிக் குழுவினரும், சிறு, குறு நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஊதுவத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கானவா்களின் வாழ்வாராதத்தைக் காப்பாற்ற தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தொழிலை மீண்டும் நடத்த நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.