தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள்

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தாா்

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:07 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி நேரில் ஆய்வு செய்தாா். கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை சாா்பில் தொற்று பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருநின்றவூா் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மருத்துவ முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தரமான பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா். அதைத் பின்னா் ஆவடி மாநகராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டுப்படுத்த பகுதியிலும், சந்தைப் பகுதியில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளும் பணியினையும் ஆய்வு செய்தாா்.

அப்போது பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரபாகரன், மாநகராட்சி ஆணையா் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.