டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வழிப்பறி செய்தனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 1:17 am

DIN

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகைகளை மா்ம நபா்கள் வழிப்பறி செய்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த தகரகுப்பம் தொட்டிக் கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பாபு மனைவி மம்தா (29). இவரது உறவினா் ப்ரித்தீபா (30). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பா்கூா் நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தனா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி முத்தனப்பள்ளி டோல்கட் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ் மொபெட்டை வழிமறித்து மம்தாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு உள்பட 7 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.