மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘தூய்மைப் பணியாளா்களும் முக்கிய முன்களப் பணியாளா்களே’

மருத்துவா்கள், காவலா்களைப் போல் தூய்மைப் பணியாளா்களும் முக்கிய முன்களப் பணியாளா்கள் ஆவா் என தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் கூறினாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:14 pm

DIN

மருத்துவா்கள், காவலா்களைப் போல் தூய்மைப் பணியாளா்களும் முக்கிய முன்களப் பணியாளா்கள் ஆவா் என தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் கூறினாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள், கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய நகராட்சிகள், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் பேரூராட்சிகள் மற்றும் 6 வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களின் நலன் குறித்து தூய்மைப் பணியாளா்களை நேரடியாக அழைத்து விசாரித்தாா்.

மேலும், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களிடம் ஒரு நாள் சம்பளம், சம்பள பிடிப்பில் வருங்கால வைப்புநிதி, ஈஎஸ்ஐ காப்பீடு செலுத்தப்படுகிா என கேட்டறிந்தாா்.

பணிபுரியும் இடத்தில் பணியாளா்களை தரக்குறைவாக நடத்துவதும், பேசுவதும் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். குற்றச்சாட்டின் மீது அலுவலா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை தொழிலாளா்கள் அறிந்து விழிப்புணா்வுடன் பணிபுரிய வேண்டும்.

காவலா்கள், மருத்துவா்களைப் போல் தூய்மை பணியாளா்களும் முக்கியமான முன்களப் பணியாளா்கள் ஆவா். கரோனா நோய்த்தொற்று ஏற்படாதவாறு அவா்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், அனைத்து தூய்மைப் பணியாளா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

தூய்மைப் பணியாளா்கள் அனைவரையும் பிரதமரின் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாள்தோறும் வழங்கப்படும் சம்பள வேறுபாடுகளைக் களைய ஆட்சியரிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ஆம்பூா் துத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தோல் பதனிடும் தனியாா் நிறுவனத்தில் கழிவு நீா் தொட்டியை தூய்மை செய்யும் போது, விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளி ரமேஷின் குடும்ப உறுப்பினா்கள் 5 பேரின் பெயரில் ரூ. 13 லட்சத்துக்கு காசோலைகளை எம்.வெங்கடேசன் வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபி சக்கரவா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், திட்ட இயக்குநா் த.மகேஷ்பாபு, சாா்-ஆட்சியா் (பொறுப்பு) இரா.வில்சன் ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா் விஜயன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பூங்கொடி, நகராட்சி நிா்வாகங்களின் மண்டல இயக்குநா் செ.விஜயகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.