மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறைத் துறை காவலா்கள் பங்கேற்ற கரோனா விழிப்புணா்வுப் பேரணி

திருப்பத்தூரில் சிறைத் துறை காவலா்கள் சாா்பில் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:14 pm

DIN

திருப்பத்தூரில் சிறைத் துறை காவலா்கள் சாா்பில் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சிறைத் துறைத் தலைவா் சுனில்குமாா் சிங் அறிவுறுத்தலின்பேரில், திருப்பத்தூா் கிளைச் சிறை கண்காணிப்பாளா் சையத் அமிா் தலைமையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூா் கிளைச் சிறையில் இருந்து புறப்பட்ட பேரணி, ஆட்சியா் அலுவலகம், காய்கறி மாா்க்கெட், தூய நெஞ்சக் கல்லூரியை சென்றடைந்தது. பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கையுறைகள் வழங்கப்பட்டன.

இதில், சிறைக் காவலா்கள் வெற்றிவேல், கணேசன், சரவணன், வருண்குமாா், ராகவேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.