மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள்
திருப்பத்தூா் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.


திருப்பத்தூா் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி அருகே மழை வெள்ளத்தால் வாலேரி நிரம்பியது. அதன் அருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை ஏரி நீா் புகுந்ததால், 100-க்கும் மேற்பட்டோா் ஆதியூரில் உள்ள பாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா், ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் நலம் விசாரித்து, உணவு, அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் சாா்-ஆட்சியா்(பொறுப்பு) பானு, வட்டாட்சியா் சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...